உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஆரம்பமாகட்டும்!ஜாதி அனல் அடிக்கும்சமூக தோட்டத்தில்சமரச தென்றல் வீசும்காட்சி ஆரம்பமாகட்டும்!மதச்சாயம் மாறாதமனிதர் இதயங்களில்வண்ணங்கள் வலம் வரும்வசந்தங்கள் ஆரம்பமாகட்டும்!பேராசை புற்று வளரும்பெருத்த எண்ணங்களில்போதுமென்ற பொன்மனம்புழங்க ஆரம்பமாகட்டும்!பொறாமை புற்கள் முளைக்கும்பிற்பட்ட நெஞ்சங்களில்முற்போக்கு சொற்கள்முழங்க ஆரம்பமாகட்டும்!வஞ்சக வார்த்தைகள் வரும்நெஞ்சகத்து நிலங்களில்வாழ்த்து செடிகள் மலரும்வழிகள் ஆரம்பமாகட்டும்!சந்தேக சாக்கடை ஓடும்சலன சரீரத்தில்சந்தோஷ சாரல் விழும்சம்பவம் ஆரம்பமாகட்டும்!குப்பை கூளங்கள் குவிந்தகொட்டார மனங்களில்கோபுர கலசங்கள் ஜொலிக்கும்கோலங்கள் ஆரம்பமாகட்டும்!நஞ்சு ஊறி எஞ்சி கசிந்தரத்த ஆற்று நாளங்களில்சுத்த சிந்தனை சுரக்கும்சுப நாள் ஆரம்பமாகட்டும்!க. அழகர்சாமி, கொச்சி, கேரளா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !