உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஒன்று தான்!நேற்றைய எதிர்க்கட்சிஇன்றைய ஆளும் கட்சிஇன்றைய எதிர்க்கட்சிநேற்றைய ஆளும் கட்சி!நேற்றும் இன்றும் கட்சிகள்ஒரே மாதிரியாகத்தான்இருக்கின்றனஎல்லா காட்சிகளிலும்!சட்டசபையில்கூச்சல், குழப்பம்வெளிநடப்பு, போராட்டம்கட்சித் தாவல்!சொத்துக் குவிப்புவழக்குப் பதிவுகொலை, கொள்ளை, கற்பழிப்புகுற்றச்சாட்டுகள்!தொழில் முனைவோரை ஈர்க்கவெளிநாட்டு பயணம்பல்லாயிரம் பேருக்கு வேலைஎன விளம்பரம்!நிதி வேண்டியும்உரிமை வேண்டியும்சட்டம் மாற்றவும்மைய அரசுக்குக் கடிதம்!இலவச அறிவிப்புகளும்சலுகைகளும்கடன் தள்ளுபடிகளும்விலை உயர்வுகளும்!எக்காலத்திலும் மாற்றம்இல்லாமல் தான்இருக்கின்றனஆட்சி மாறினாலும்!குட்டை ஒன்று தான்மட்டைகளும் ஒன்று தான்வேடிக்கை பார்க்கும்மக்களும் ஒன்று தான்!சொல்கேளான் ஏ.வி.கிரி,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !