உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இல்லாமல் இருக்கலாமா!வறுமை இருக்கலாம்வசந்தம் பிறக்கலாம்மனிதம் மறக்கலாமா?ஆசை முளைக்கலாம்அன்பு தழைக்கலாம்பண்பு உதிரலாமா?காசு இருக்கலாம்கனவு பலிக்கலாம்கருணை துறக்கலாமா?நண்பர் இருக்கலாம்அன்பர் இருக்கலாம்வன்மம் வளர்க்கலாமா?பாசம் படரலாம்நேசம் தொடரலாம்வேஷம் போடலாமா?ஊரு இருக்கலாம்உறவு இருக்கலாம்உண்மை உறங்கலாமா?காதல் கனியலாம்மோதல் முறியலாம்சாதல் இருக்கலாமா?காட்சி கலையலாம்சாட்சி சறுக்கலாம்சூழ்ச்சி செய்யலாமா?நெஞ்சை நிமிர்த்தலாம்நீதி பேசலாம்அஞ்சி வாழலாமா?கொஞ்சி கிடைக்கலாம்மஞ்சம் தொடுக்கலாம்வஞ்சம் விதைக்கலாமா?போதனை உரைக்கலாம்சாதனை நிகழ்த்தலாம்வேதனை விளையலாமா?வேதம் வகுக்கலாம்நாதம் இசைக்கலாம்பேதம் பார்க்கலாமா?பேச மறுக்கலாம்பெருமை உரைக்கலாம்பொய்மை மலரலாமா?நரையும் தொடங்கலாம்திரையும் மூடலாம்இறையை மறக்கலாமா?எஸ். முருகன், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !