கவிதைச்சோலை!
வாழ்க்கைப் போராட்டம்!* யானைகள் வாழும்பூமியில் தான்எறும்புகளும் வாழ்கின்றன!* பூனைகள் வாழும்வீடுகளில் தான்எலிகளும் வாழ்கின்றன!* புலிகள் வாழும்காடுகளில் தான்மான்களும் வாழ்கின்றன!* சுறாக்கள் வாழும்கடலில் தான்சிறு மீன்களும் வாழ்கின்றன!* பாம்புகள் வாழும்வயல்களில் தான்தவளைகளும் வாழ்கின்றன!* பாறைகள் கிடக்கும்பாதையில் தான்நதிகளும் பாய்கின்றன!* ராஜாளி பறவைகள்வலம் வரும் வானில் தான்சின்னப் பறவைகளும்சிறகடிக்கின்றன!* சவால்கள் இல்லையென்றால்சாரமில்லை...வாழ்க்கை என்பதுசூதாடிப் பெறுவதல்ல;போராடிப் பெறுவது!— இளசை சுந்தரம், மதுரை.