உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மலை போல் உயர்ந்து நிற்போம்!பொங்கி வரும் கோபத்தைபொறுமையை கொண்டுபொசுக்கித் தள்ளுங்கள்பொறுமை இழந்தால்வம்பு, வழக்குகள்வரிசை கட்டி நிற்கும்!எடுத்தெறிந்து பேசுவதைசிந்தனை உணர்வால்அறுத்தெறிந்து போடுங்கள்பிறர் மனம் புண்பட்டால்சாபத் தீ பற்றி எரியும்!குற்றம் காண்பதைமுடிந்தவரைகுறைத்துக் கொள்ளுங்கள்காண்பன யாவும்குற்றமென நினைக்கையில்சுற்றங்கள் சுருங்கிதனிமை வறுத்தெடுக்கும்!பேச நினைப்பதைஒருமுறைக்குப் பலமுறைசிந்தித்துப் பேசுங்கள்சிந்தனையில் சறுக்கல் விழுந்தால்சந்திச் சிரிக்கவாழ்க்கை நாற்றமடிக்கும்!எல்லா உயிர்களிடத்திலும்அளவற்ற அன்பைமழையாக பொழியுங்கள்மனித நேய உணர்வால்விண்ணைத் தொடும்மலையாகஉயர்ந்து நில்லுங்கள்!எல். மூர்த்தி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !