உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

இடுகாட்டில் காத்திருப்பேன்!* என்னைக் கொண்டேஎன் மூளைசெல்களுக்குள்உன் பெயரைபச்சை குத்திக் கொண்டவளே...* உன்னுள் கரைந்துஉன் காதலில் நான்தாய்மை அடைந்தேன்!* என் மனம்உன்னால் குப்பையாய் போனதால்,நீ தீண்டி குப்பையில்போட்டவைகள் எல்லாம்பொக்கிஷமாய் என் அறையில்!* சிவந்து சிரிக்கும்முற்றத்து ரோஜா...* தாவி ஓடும்கொல்லைப்புற அணில் குட்டி...* ஒவ்வொரு நிகழ்வும்நொடிக்கொரு தரம்உன் நினைவுகளைஎன்னுள் புதுப்பித்துக் கொண்டேஇருக்கிறது!* எல்லா பெண்களையும்போல் தானே நான்,என்னிடம் புதுமையாய்எதை கண்டாய்என ஏளனமாய் கேட்டாய்!* பிரியமே...என்னை உன்னில்மட்டும் தானே காண முடிகிறது!* வாழும் போது ஒருவராய்வாழும் நாம்...மரிக்கும் போது மட்டும்நான் சிறிதுமுந்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்!* உனக்கு முன்நான் மரித்து,மக்கி, மண்ணாகிஉன்னை மலர் போல்தாங்க,இடுகாட்டில் காத்திருப்பேன்!— எஸ்.ஏ.சரவணக்குமார், திருநின்றவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !