உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தவிர்க்கிறேன்... தவிக்கிறேன்!* யாருமற்ற மவுனத்தில்இரவில் கரைந்தொழுகும்உன் நினைவின் பிம்பங்கள்வென்றெடுக்கிறது என்னை...* களைத்தெடுக்க இயலாகனவெனபிய்த்தெறிய முடியாபச்சைக் குத்திய ரணமெனஉன்னால் கிளர்ந்தெழும்என் மன உணர்வின் தழும்புகளைபிறர் காணக் கூடுமோஎனும் அச்சத்தின் விளிம்பில்தத்தளிக்கிறேன்!* உனை தவிர்க்கஉள்ளுக்குள் மட்டுமேஉணர்வுகளை ஒளித்து வைத்துஏளனப் பார்வை ஒன்றைஉன்மேல் வீசி கடக்கிறேன்!* ஆயினும், உறைய வைக்கவேஇயலவில்லை...இமை மூடிய கண்ணுக்குள்ளும்இதழ் மூடிய இதயத்துள்ளும்நீ எழுப்பும் மெல்லியசலன அதிர்வுகளை!— க.அகிலா, வண்டலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !