உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நட்பெனப்படுவது யாதெனில்...* நண்பனே... உன்நேசத்தை விட,உன்னை நேசிக்கும்என்,ப்ரியம் மிகவும்உன்னதமான தென்றுதெரியுமா, உனக்கு?* என் சம்பந்தப்பட்டஎதுவும் ஒருபொருட்டில்லைஉனக்கு...ஆனால், உன்சம்பந்தப்பட்டஎதுவும்மறந்ததில்லைஎனக்கு... அதுதெரியுமா, உனக்கு?* நட்பை யாசித்துபெறக் கூடாதுநண்பனே...யாசித்தால், அதுஅந்த நட்புக்கேகளங்கம்...நட்புக்காகயாசிக்கலாம்...எதையும், யாரிடமும்!அது, அந்தநட்புக்கேஅலங்காரம்... அதுதெரியுமா, உனக்கு?* நட்பு...நட்புக்காக, எதையும்மன்னிக்கும், மறக்கும்தோளணைக்கும்தோள் கொடுக்கும்சேர்த்தணைக்கும் விரல்இணைக்கும்... அதுதெரியுமா, உனக்கு?* நட்பில்கணக்கு பார்ப்பதும்...கணக்காய் இருப்பதும்தவறடா... என்தோழா...நட்பிற்கும் ஒருஇலக்கணமுண்டு!கணலணையகற்புமுண்டு... அதுதெரியுமா, உனக்கு?* என்றோ ஒரு நாள்என் நேசமும்,என் நட்பும்உனக்குப் புரியும்என்ற நம்பிக்கையில்தினமும்நாட்களைநான் கடத்துகிறேன்அதாவது...தெரியுமா, உனக்கு?— ஜே.சி.ஜெரினா காந்த், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !