கவிதைச்சோலை!
பெண்ணே!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...வாழ்த்துபவர்களை விடவீழ்த்துபவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...போற்றுபவர்களை விடதூற்றுபவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...போதிப்பவர்களை விடசதிப்பவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...புகழ்பவர்களை விடஇகழ்பவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...சேர்த்து வைப்பவர்களை விடபிரித்து வேடிக்கை பார்ப்பவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...சிரிக்க வைப்பவர்களை விடஅழ வைப்பவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...காதலித்து ஜெயித்தவர்களை விடதோற்றவர்களே அதிகமென்று!* உன்னை காதலித்த பின்தான்தெரிந்து கொண்டேன்...காதல் தோல்வி தினமெனஒரு நாள் இருந்தால்...அந்நாளில் —ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெருதோரணம் கட்டிகாதல் சோக பாட்டைஒலிபெருக்கியில் வைத்துதாடியோடு தண்ணியடித்தபடிகாதலர் தினத்தை விட சிறப்பாய்உலகமேஅந்நாளை கொண்டாடுமென்று!— பொட்டல்குழி ரா.ரெத்தினமணி, பாளை., மத்திய சிறைச்சாலை, நெல்லை.