உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மழையின் வர்ணங்கள்...* எதனோடெல்லாமோ ஒப்பிட்டு எப்படியெல்லாமோவர்ணித்து விட்டனர் அதை...'மழை' என்று சொன்னாலே போதுமேமனதுக்குள் பெய்யுமே!* இந்த மழைக்குத் தெரியவில்லைஎப்போது பெய்ய வேண்டுமென்று...ஆனால், அது எப்போது பெய்தாலும்சூழ்நிலை மறந்து ரசிக்கமனதுக்கு தெரிகிறது!* நீருக்கு ஏங்கும் வறண்ட நிலம்விக்கல் எடுக்கும் மரங்கள்வருவதை பிடிக்கவைத்துள்ள பாத்திரங்கள்வழிந்தோடும் வாகன மேற்கூரைகள்வடிந்து வீணாகும் தார் சாலைகள்...என எல்லா இடத்திலும்ஒருபோல பெய்யும் மழைஅன்பை எப்படி பொழிவதுஎன்பதை சொல்ல வருகிறதோ!* எத்தனையோ மணித்துளிகள்தொடர்ந்து பெய்தாலும்சில மனங்களை மட்டும்ஈரமாக்க முடியவில்லைஅடை மழையால்!* மழை பெய்கிற பொழுதுகளில்மட்டுமே தெரிகிறதுவிரிந்து பரந்த அவர்கள்ஆகாயக் கூரையில்எத்தனை பொத்தல்கள் என்றுபிளாட்பாரவாசிகளுக்கு!* பூமியின் கோபத்தைமழையால் ஒத்தியெடுத்துஆற்றியது ஆகாயம்!* ஆகாயத்துக்கு வாழ்க்கைப்பட்ட நீர்ஆசையுடன் பார்க்க வந்ததுபிறந்த வீட்டை!* உனக்கும், எனக்கும் இடையேஒவ்வொன்றாய் விழும்மழைத்துளிகளினூடேபுகுந்து புறப்பட்டுஉன்னைச் சென்றடைந்தஎன் எண்ணங்களைஉலர்த்தி எடுத்துக் கொள்!* உன் மேல் பட்ட துளியும்என் மேல் பட்ட துளியும்எங்கோ ஒன்றாகிகடலில் கலந்துமறுபடி எழுந்து மேகமாகிஎன்றோ பொழியும்நாம் சேர்ந்திருக்கும் போதுநம் மீது ஒன்றாக!— கே.பி.ஜனார்த்தனன், நாகர்கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !