உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

புரிதல்!* வெட்டப்பட்ட காய்களாய்காதல் விளையாட்டிலிருந்துநாம் வெளியேற்றப்பட்டோம்நம்மை வெட்டியசூழ்நிலைகள் கைகொட்டிச் சிரித்தன!* கண்ணீர் குளத்தில் தத்தளித்தநம்மை மீட்டெடுத்தவேறு சூழ்நிலைகள்நம்மை துவட்டிவிட்டு,மாற்றுப் பாதையை காண்பித்தன!* நீ ஒரு வழியில்நான் ஒரு வழியில்நடக்கத் துவங்கினோம்!உன் விழியை நீ, உன் வழியிலும்என் விழியை நான், என் வழியிலும்செலுத்தியபடி...* கவனமும் சிந்தனையும்நம் காதலிலிருந்துநம் வாழ்க்கைக்கு மாறிற்று...நாம் வாழத் துவங்கினோம்தனித்தனியாய்!* காதல் நம்மை கிள்ளவில்லைஅழவைத்து ஆனந்தப்படவில்லைநம்மை உருக்கி வேதனைப் படுத்தவில்லை!* எதிர்பாராத தருணமொன்றில்நம் சந்திப்பு நிகழ்ந்தது...புன்னகையால் கை குலுக்கிக் கொண்டோம்!நட்பாய் நலம் விசாரித்துக் கொண்டோம்...எட்டிப்பார்த்த காதலைதட்டி அமரச் செய்தோம்!* பிறகு,விடை பெற்றுக் கொண்டோம்...காதலை நம் கட்டுப்பாட்டில்வைத்திருந்தால்,அது, நம்மை தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்காதுஎன்ற புரிதலுடன்!— வீ.விஷ்ணு குமார், கிருஷ்ணகிரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !