உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

என்ன சொல்லப் போகிறாய்?* விழியில்ஆயிரம் கவிதைகள்சொல்கிறாய்...அருகில் வந்தால்அலைக்கழிக்க விடுகிறாய்!* எனக்கானஉன் தடயங்கள்,என் இதயத்தைபுரட்டிப் போட்டபாதைகள்!* நீயறிந்திடநான் சொன்ன காதலை - ஏனோஉனக்குள்ளே மறைத்து விட்டாய்!* நீயறிந்திடாததைப் போலநீ நடந்து கொள்ளும் போதுஎன் காதலெங்கும் தீயில்எரிந்திடுகிறது!* வானத்துக்குள்நிலவாய் நீஜொலித்துக் கொண்டிருக்க,உன் வீட்டு செடியில்பூக்களாய்என்னை காத்திட வைக்கிறாய்!* காற்றாய் நீ சுற்றி வரகண்டு கொள்ளாமல்நானிருந்தது குற்றம் தான் -அதற்காகவேதென்றலாய் நான் வரபுயலாய் நீ போகாதே!* அன்புப் பார்வையைஎறிந்து விட்டுஏன் அதிகாரப் பார்வையில்ஆட்சி செய்கிறாய்!* என் அன்பே...உனக்கும், எனக்கும்தினந்தோறும் நிகழ்வதுகாதல் யுத்தமா...அல்லதுகாம யுத்தமா...நீயே சொல்லி விடு...இல்லையெனில்உன் நினைவில்லாதஉலகில் என்னைவாழவிடு!— வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !