கவிதைச்சோலை
மனிதனைத் தவிர...* வண்ணத்துப்பூச்சிபசியாறிய பின்னும்பறித்த பூக்களில்மிச்சமிருக்கிறதுதேன்!* குருவிகள்கொத்தித் தின்ன பிறகும்அப்படியே இருக்கிறதுமுற்றத்தில் காய வைத்த நெல்!* அணில் கடித்த பிறகும் கூடகுறையாமலேயே இருக்கிறது கனியும், சுவையும்!* பசு மேய்ந்த பிறகும்நிலம் மறைக்கஎஞ்சியிருக்கிறது பசும்புல்!* புலிகளும், மான்களும்எண்ணிக்கையில்எப்போதும்சமன் செய்து கொள்கின்றனபற்றாக்குறைநிகழ்ந்து விடாமல்!* தான் உண்டது போக,மீதியைக்கட்டியெடுத்து போகும்சுயநலம்,ஐந்தறிவு உயிர்கள்எவற்றிற்கும் இல்லை...தன்னை ஆறறிவாய்பிதற்றிக் கொண்டு திரியும்மனிதனைத் தவிர!— கீர்த்தி, கொளத்தூர்.