உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - வாழ்க்கை என்றும் இனிமையே!

கல்வி எனும் அஸ்திவாரம் மேல்வலிமையும், வாய்ப்பை சாதகமாக்கும் திறமையும்உருவாக்கிக் கொண்டு வருவது தான்வாழ்க்கை எனும் கட்டடம்!நம் எந்த ஒரு செயலிலும்முயற்சி என்பது துவக்கமே தவிரஎல்லை என்பது அதற்கு என்றுமே இல்லை!பயணத்தில் களைப்பு என்பதுவெறும் காற்புள்ளி தான்இலக்கை கீழ் இறக்கச் சொல்லும்முற்றுப்புள்ளி அல்ல!பயிற்சி என்பது விடாப்பழக்கம்வாழ்நாள் முழுதும் அது தொடரகிடைக்குமே என்றும்இனிமையான அனுபவம்!தோல்வி என்பது தடை அல்லநம் உத்தியைச் சிறிதுமாற்றச் சொல்லி கற்றுக் கொடுக்கும்அருமையான பாடம்!இல்லறம் எனும்சதிபதியின் கூட்டு முயற்சியின் ஊடேஅன்பும், பாசமும் இழையோடுகையில்இனிது உதயமாவதே நல்லறம்!இன்ப துன்பம் கலந்ததே வாழ்க்கைஎன்றும் இல்லாளுடன்கைகோர்த்து நடக்கஎளிதாக அடைய முடியுமே இலக்கை!அன்பை அள்ளித் தரும்பிள்ளைகள் ஒருபுறம் நடக்கபாச நட்புகளும், நேச உறவுகளும்மறுபுறம் புடைசூழவலம் வரும் வாழ்க்கைப் பயணம்என்றுமே இனிமை தான்!— பூவை சுபாவாணன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !