உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பலமும், பலவீனமும்!

பலம் மட்டுமே கொண்டமனிதர் ஒருவருமில்லைபலவீனம் என்பதுமாற்றவியலாத குறையுமில்லை!கண் எனும் உறுப்புஎல்லாருக்கும் பொது தான்காணும் பார்வையோஅவரவருக்கு வேறு தான்!துாசில்லா துாய காற்றென்பதுஒருவரின் நம்பிக்கை மட்டுமேஆனால், நிதர்சனத்தில்உண்மை அதுவல்ல!சரியான எடையென்பதுநம் எண்ணம் மட்டுமேதராசுகளின் வேறுபாட்டைநாம் அறிய இயல்வதில்லை!வண்ணங்கள் குழைத்துதுாரிகை தொட்டுவரைந்திடும் ஓவியம் நிறைவானதாஎன்பதை வரைந்தவனே அறிவான்!சிற்றுளி தட்டிகற்பாறைகள் செதுக்கிவடித்திடும் சிலை முழுமைதானாஎன்பதும் சிற்பியே உணர்வான்!உதிர்க்கும் சொற்களின் முன் பின்னாய்உண்மையெனும் பொய்யும்பொய்யெனும் உண்மையும்இருப்பதை மறைக்கலாமா?குறையில்லா மனிதரில்லைகுறையில்லாதோர் மனிதரே இல்லைஎனும் உயரிய தத்துவத்தைஏற்றிட மறுக்கலாமா?— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !