கவிதைச்சோலை...
இதயம் வலிக்கிறது!பூலோக சொர்க்கமேநீ சிரித்தால்சப்த ஸ்வரங்களும்சப்தமற்று போய் விடுகிறது!ம்ம்மா... ம்மா... ம்மா...ப்ப்பா... ப்பா... ப்பா...த்த்தா... த்தா... த்தா...உன் கவிதைக்குஅர்த்தம் தேடியதில்உலகத்து அகராதிகள் எல்லாம்அச்சடித்த வெற்று காகிதமாய்அர்த்தமற்று தெரிகிறது!தேனீக்கள் சேகரித்த தேன்உன் உமிழ் தேனின் முன்சுவையற்று போய்விட்டது!உன் பிஞ்சு விரல் படும் போதுஒரே நேரத்தில்ஓராயிரம் வீணைகள்என் உடம்பிற்குள் மீட்டப்படுகின்றன!உலகத்து மொழிகள் எல்லாம்உன் மழலை மொழியின் முன்அனர்த்தமாய் ஒலிக்கிறது!நடராஜன் நாணுகிறான்உன் கை அசைப்பையும்கால் அசைப்பையும் கண்டு!நீ விழித்திருக்கும்நேரமெல்லாம்பூகம்பத்தில் சிதறுண்டபொருட்களைப் போல்வீடு அலங்கோலமாய்கிடக்கிறது!நீ துயிலும் நேரமோமண், மரம், செடி கூடமவுன விரதம்அனுஷ்டிக்கிறது!என் செல்லமே...நீயும் வளர்வாய்காமம், கோபம், குரோதம்வெறுப்பு, விரோதம், கயமைஅத்தனை உணர்வும்உன்னையும் ஆட்டிப் படைக்குமேஎனும் போதுஇதயம் ஏனோ வலிக்கிறது!— ப.லட்சுமி, கோட்டூர்.