உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை...

நன்றி சொல்லுங்கள்!குறை சொல்பவர்களுக்குநன்றி சொல்லுங்கள்ஏனென்றால்,உங்களை நீங்களேசெதுக்கிக் கொள்வதற்குஅவர்கள்தான்உளி கொடுக்கின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் வாடிக்கையாளராக இருந்தால்உங்கள் வளர்ச்சிக்குஅவர்கள் வழி சொல்கின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் நண்பர்களாக இருந்தால்உங்களை நல்வழிப்படுத்தஅவர்கள் முயற்சிக்கின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் ஆசிரியர்களாக இருந்தால்உங்களைச் சிகரங்களாக்கஅவர்கள் சிரமம் எடுக்கின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் பெற்றோராக இருந்தால்நீங்கள் அவையத்து முந்தியிருக்கஅவர்கள் விரும்புகின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் மேலதிகாரிகளாக இருந்தால்உங்கள் முன்னேற்றத்திற்குச்சிறகுகள் தருகின்றனர்!குறை சொல்பவர்கள்உங்கள் போட்டியாளர்களாக இருந்தால்நீங்கள் வெடித்தெழுவதற்காகஅவர்கள் நெருப்புத் திரி வைக்கின்றனர்!ஆம்...குறை சொல்பவர்கள்முன்னேற்றத்தின் திசையை நோக்கியேஉங்களை விரட்டுகின்றனர்!ஆகவே!குறை சொல்பவர்களுக்குநன்றி சொல்லுங்கள்!— கவிதாசன், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !