உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை...!

மன்னார(ன்)ங் கம்பெனிகள்!எக்கா எக்கா பேச்சியக்கா,என் கொடுமையக் கேட்டியா?வாயக்கட்டி வயித்தக்கட்டிவருசமெல்லாம் வேலை செஞ்சுஆன கஞ்சி குடிக்காமஅடிவயிறு சுருங்கிப்போச்சு!பத்துப்பாத்திரம் தேச்சுத் தேச்சுபத்து விரலும் தேஞ்சு போச்சு!இப்படியெல்லாம் பாடுபட்டு,நான் சேத்த கொஞ்ச பணத்தை,எவனோ ஒருபாவிய நம்பி,இழந்துட்டு நிக்கிறேன்!என்னென்னமோ பேருவச்ச கம்பெனிகஎத்தனையோ திட்டங்கள்ல முதலீடாம்...அத்தனையும் வட்டிவட்டியாக் கொட்டுமாம்!அடுத்த அஞ்சு வருசத்திலநானும் ஒரு அம்பானியாம்!ஐம்பதாயிரம் கட்டினாக்காஅடுத்த வருஷம் லட்சாதிபதி...அதுக்கு மேல பணம் போட்டாஅரைப்பவுன் தங்கம் தாரேன்...ஓம்புள்ள கல்யாணத்தஓகோன்னு நடத்திரலாம்!பத்துப் பேரச் சேத்து விட்டாபத்தாயிரம் கமிஷன் தாரேன்பட்டுச்சேலை, வாஷிங்மெஷின் தீவாளிப்பட்டாசும் பரிசாத்தாரேன்...பிள்ளகுட்டி எல்லாரோட'பிக்குனிக்கும்' போய் வரலாம்!இப்படியெல்லாம் சொல்லித்தானேஏமாத்திப்புட்டாங்க...கேப்பையில வடியுறது நெய்தான்னு,கேணச்சிறுக்கி நான் நம்பிப்புட்டேன்!அக்கம் பக்கத்தில் சொன்னாங்கஅதிக வட்டி கிடைக்குமுன்னுஆசைப்பட்டு கட்டிட்டுஇப்ப அவதியில மாட்டிக்கிட்டேன்!முந்தாநாளு சேதியிலமூஞ்சியெல்லாம் மூடிக்கிட்டேமூணு பேரு போனாங்க...யாருன்னு பாத்தாக்க, யாத்தே... என்ஈரக்கொலை நடுங்கிப் போச்சு!என்னைப்போல பல பேர அவ(ன்)ஏமாத்தியிருக்கான்னுஇப்பத்தான் புரிஞ்சிச்சு!பசி பட்டினின்னு பாக்காமபாத்துப்பாத்து சேத்தபணம்,அளவுக்கு மீறின ஆசையாலஅத்தனையும் போச்சேக்கா!பிள்ளை குட்டியக் காப்பாத்தபெரும்பாடு படுற மக்கா...அரசாங்கம் சொல்லுறதஒரு அரைநாழி கேளுங்க!பத்துக்காசா இருந்தாலும் அதைபாதுகாப்பா சேத்து வைக்கணும்...கெட்ட பின் தானக்கா எனக்குஎட்டுப்புத்தி வந்திருக்கு!வேர்வையில வெளைஞ்ச காசுஅது உசுரக்காட்டிலும் பெரிசு...யோசிக்காம சீட்டுல கட்டிஒரு போதும் இழந்துராதீங்க...அந்த, 'மன்னார(ன்)ங் கம்பெனிகள...' மக்கா நீங்கஅடையாளம் தெரிஞ்சுக்கங்க!— இரா.தமிழ்செல்வன், காவல் ஆய்வாளர்பொருளாதார குற்றப்பிரிவு - IIமதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !