உள்ளூர் செய்திகள்

மறதி நோயால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகள்!

மேடை ஏறி, புள்ளி விவரங்களை அள்ளிவீசி, கட்சிக்காரர்களை வியக்க வைத்த பல அரசியல்வாதிகள், வயதான காலத்தில், ஞாபக மறதி நோயால் அவதிப்படுவதுண்டு. இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய, ஜார்ஜ் பெர்னாண்டஸ், இப்போது உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வாழ்ந்து வருகிறார். கேரள அரசியலில் எம்.வி.ராகவன் வாழ்க்கையும் அப்படி தான் உள்ளது. இடது கம்யூ., கட்சியில் இருந்து இவரை நீக்கியபோது, ராகவன், 'சி.எம்.பி.,' என்று, ஒரு தனி கட்சி ஆரம்பித்து, மேடை மேடையாக கர்ஜித்து வந்தார். ஆனால், இப்போது இவருடைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஞாபக மறதியால் அவதிப்படும் ராகவன், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்று தெரியாமலேயே ஓட்டு போட்டு வந்துள்ளார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !