உள்ளூர் செய்திகள்

விலை மதிப்பற்ற நடிகை!

பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு, 'மேரி கோம்' என்ற பெயரில், திரைப்படமாக வெளிவந்து, வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. இதில், பிரியங்கா சோப்ரா, மேரி கோமாக நடித்துள்ளார். இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பெடியின் வாழ்க்கை வரலாறும், திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது. இதில், கிரண் பெடியாக நடிக்க இருப்பவர், தீபிகா படுகோனே. இப்படத்தில் நடிக்க, இவருக்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதுவரை, பாலிவுட்டில் எந்த நடிகைக்கும் இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது இல்லை. இதுகுறித்து தீபிகாவை கேட்டபோது, 'நான் விலை மதிப்பற்ற நடிகை...'என, தன்னைத் தானே பீற்றிக் கொண்டார்.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !