உள்ளூர் செய்திகள்

இளவரசர் திருமண ஊர்வலம் பழைய கார்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கும், அவர் காதலி கேத் மிடில்டனுக்கும், ஏப்., 29ம் தேதி, கோலாகலமாக திருமணம் நடக்க உள்ளது. வழக்கமாக திருமணம் நடக்கும் சர்ச்சுக்கு வரும் அரச புது மண தம்பதியினர், குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார வண்டியில் தான் வருவர்; ஆனால், கேத் மிடில்டன், பழைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வர விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த கார், இளவரசர் சார்லசுக்கு சொந்தமானது.கடந்த, 1977ம் ஆண்டு மாடலான இந்த, 'ரோல்ஸ் ராய்ஸ் பான்டன் 6' ரக காரில், கடந்த டிசம்பர் மாதம் இளவரசர் சார்லசும், அவர் மனைவி கமிலாவும் சென்ற போது சேதமடைந்தது. மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, அதில், இவர்கள் கார் மாட்டிக் கொண்டது. கார் கண்ணாடிகள் உடைந்தன. இப்போது, இந்த காரின் பழுது நீக்கப்பட்டு, சரி செய்கின்றனர். காருக்கு புது வர்ணம் தீட்டப்பட்டு, மெருகேற்றப்பட்டு வருகிறது. திருமண நாளுக்கு முன்பாக கார் தயாராகி விடும்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !