உள்ளூர் செய்திகள்

தத்துவவாதியானார் ப்ரியங்கா சோப்ரா!

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று திறமை காட்டி வரும் நடிகை ப்ரியங்கா சோப்ரா, உடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகைகளிடம், 'புகழும், அழகும் நிலையற்றது; ஒருபோதும் என் வெற்றி, என்னை மகிழச் செய்தது இல்லை. முதலில், நாம் யார் என்பதை உணர வேண்டும். இன்று, நம்மிடம் உள்ள அனைத்தையும், ஒருநாள் துறந்தாக வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டால், நமக்கு கிடைத்தது ஒரு நிமிடமே ஆனாலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும்...' என்று தத்துவம் பேசி அவர்களை வியக்க வைக்கிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !