உள்ளூர் செய்திகள்

அரிதிலும் அரிதான வைரம்!

சுரைக்காய் வடிவில் இருக்கும், 32 காரட் எடையுள்ள இந்த மஞ்சள் நிற வைரத்தை, அரிதிலும் அரிதான வைரம் என்று, அமெரிக்காவின் ஜெமோலாஜிகல் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.பொதுவாக, வைரத்திற்கு மஞ்சள் நிறம், அதன் கார்பன் அணுக்கள் நைட்ரஜனாக மாறும் போது நிகழும். இந்த வைரம், அதிகப்படியான நைட்ரஜனை உமிழ்ந்ததால், இந்தளவு மஞ்சள் நிறமாக பிரகாசிக்கிறது என்கின்றனர்.இந்த மாதிரி வைரம், 10 மில்லியனுக்கு ஒன்று என்ற கணக்கில் தான் கிடைக்கும் என்கிறார், அமெரிக்காவின் பிரபல கிறிஸ்டி நகைக் கடை அதிபர்.கடந்த, 1990ல், லண்டன் ஏலத்தில் இதைப் போன்ற ஒரு மஞ்சள் நிற வைரம், 18 காரட் எடையுள்ளது, ஒரு காரட், 2 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. இப்போதுள்ள வைரம், அதையெல்லாம் மிஞ்சும் என்கின்றனர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !