உள்ளூர் செய்திகள்

14 ஆயிரம் அடி உயரத்தில் சாதனை !

பூமியில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில், நடு வானில் பறந்தபடி 31.5 வினாடியில், 'கியூப்' ஒன்றை சரி செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் பாராசூட் வீரர் ஒருவர்.லுட்விக்பிக்டி என்ற அந்த ஜெர்மனியைச் சேர்ந்த பாராசூட் வீரர், சமீபத்தில் லண்டன் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடுவானில் விமானம் பறக்கும் போது, விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தார். அப்போது அவர் கையில், 'கியூப்' என்ற விளையாட்டு சாதனம் இருந்தது. எல்லா பக்கமும் ஒரே வண்ணத்தை  அந்த கியூபில்  31.5 வினாடியில் வானில் பறந்த படியே கொண்டு வந்தார். பின்னர் தான் அவர் பாராசூட்டை விரிக்கும் பொத்தானை அழுத்தினார். இந்த சாகசம் முழுவதும் வீடியோவில் படமாக்கப்பட்டது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !