கடலுக்குள் உணவு விடுதி!
ஐரோப்பிய நாடான நார்வேயில், 'தி அண்டர்' என்ற உணவு விடுதி, கடலுக்குள் இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா... உணவு விடுதியை சுற்றி, கடல் இருப்பதால், பெரிய பெரிய மீன்கள் நீந்தும் காட்சிகளை பார்த்தபடியே உணவு அருந்தலாம். 24 செ.மீ., கனம் உள்ள கண்ணாடிகளால் இந்த உணவு விடுதியை உருவாக்கி இருக்கிறார், நார்வே கட்டட வல்லுனரான, ஸ்னோஹெட்டா. இங்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன. வாடிக்கையாளர் யாருக்காவது, மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.- ஜோல்னாபையன்.