ஓய்வெடுக்கிறது பிக்பென் கடிகாரம்!
லண்டன் மக்களை, காலையில் எழுப்பி வந்த, 'பிக் பென்' கடிகாரம், பராமரிப்பு பணி காரணமாக, வரும், 2017 முதல், மூன்று ஆண்டுகளுக்கு ஒலிக்காது. இக்கடிகாரத்தின் பராமரிப்பு பணிக்காக, 285 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவெடுத்துள்ள அந்நாட்டு அரசு, 'வழக்கமாக இயங்காவிட்டாலும், மிக முக்கியமான நிகழ்ச்சிகளின் போது, மணி ஒலிக்கும்...' என்று அறிவித்துள்ளது.கடந்த, 1856ல் இருந்து, 'பிக் பென்' கடிகாரம், மணி ஒலித்து வந்தது. 96 மீட்டர் உயரமுள்ள கடிகாரத்துக்கு, ஆரம்ப காலத்தில் பூசப்பட்ட அதே வண்ணம் தான் தற்போதும், பூசப்பட உள்ளது.— ஜோல்னாபையன்.