பாம்புக்கடி வைத்தியர்!
கடந்த 55 ஆண்டுகளாக, கேரளாவில், பாம்புக் கடி வைத்தியத்தில் சிறந்து விளங்குகிறார் கல்லார் ஆதிவாசி தலைவர் மல்லன் காணி. 'பாரம்பரிய மாக, முன்னோர்களிடம் கற்றுக் கொண்ட வைத்தியத்தினால், ஏராள மானவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன்...'பாம்பு கடித்து உயிருடன் போராடிக் கொண்டிருப்பவருக்கு, பச்சிலை மருந்தால் தயாரித்த மாத்திரை ஒன்று கொடுப்பேன். மருந்தை உட்கொள்ளும் போது கசப்பு ருசியை உணர்ந்தால் மட்டும் தான், சிகிச்சை பலனளிக்கும்...' என்கிறார் இவர். காட்டில் காணப்படும், கத்தி போன்ற ஒரு காய் மூலம், பாம்பு கடித்த இடத்தை சுத்தம் செய்து, பின், சில சிறப்பு பச்சிலை மருந்துகள் அரைத்து, காய வைத்து உருவாக்கப்பட்ட, 'விஷக்கல்' என்ற கல்லை, பாம்பு கடித்த இடத்தில் வைத்து, இறைவனை வேண்டுகிறார்; பாம்பு கடிபட்டவர் குணமாகிறார். இப்படி, ஆயிரக்கணக்கானவர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றிய தாக கூறும் இவர், சிகிச்சைக்காக ஒரு பைசா கூட இதுவரை பெற்றது இல்லை. 'வைத்தியத்துக்கு பணம் பெற்றால், இறைவனுக்கு கோபம் ஏற்பட்டு, மருத்துவ திறனை அழித்து விடுவார்' என்று, நம்புகிறார் மல்லன்காணி. இவர், தன்னுடைய பதினைந்தாவது வயதிலிருந்து வைத்தியம் செய்து வருகிறார்.— ஜோல்னா பையன்.