உள்ளூர் செய்திகள்

சிரியுங்கள் மன அழுத்தத்தை விரட்டுங்கள்!

மே 3, உலக சிரிப்பு தினம்புகைப்படக்காரரிடம் சென்றதும், அவர்கள் கூறும் வார்த்தை, சிரியுங்கள்!காரணம், புகைப்படத்திற்கு கூட, பலர் சிரிப்பதில்லை.* மோனலிசா, இன்று வரை, அவருடைய புன்னகைக்காக தான் பேசப்படுகிறார். நடிகை கே.ஆர்.விஜயாவின் புன்னகை, மிகவும் பிரபலம். அதனால் தான், 'புன்னகை அரசி' என, கூறுகின்றனர்* சிரிக்கத் தெரிந்தாலே, வாழ்க்கையில் முன்னேறலாம். ஒருபடி முன்னேறி, மற்றவரை சிரிக்க வைத்தால், உச்சியை தொடலாம்* சிரிக்க வைப்பவருக்கு, நண்பர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு* ஆபிசிலிருந்து, 'டென்ஷன்' ஆக வீடு திரும்புபவர்களில் பெரும்பாலானோர், முதலில் செய்யும் நல்ல காரியம், 'டிவி'யில் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பது தான். அதுவும், வடிவேலு சிரிப்பு காட்சிகளை பார்க்கும் போது, அவருடைய சவடால்கள், அபத்தங்கள், அல்டாப்புகள் நமக்கு சிரிப்பை வரவழைக் கின்றன. பலன், மனதில் குடி கொண்டிருந்த, மன அழுத்தம் மாயமாய் மறைந்து விடுகிறது* சீனாவில், சமீபத்தில், ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்க வந்தவர்களிடம், அவர்களின் புன்னகை பணமாக ஏற்கப்பட்டது* சிலர் புன்னகை செய்தால், அது தங்கள் கவுரவத்துக்கு குறைச்சல் என, நினைக்கின்றனர்* தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் 'ரிசர்வ்ட் டைப்' வகையினர் சிரிக்க மாட்டார்கள்* மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பவர்கள், சிரிக்க மாட்டார்கள்; மற்றவர்களையும் சிரிக்க விட மாட்டார்கள்* சிரித்தாலே, மற்றவர் தவறாக எண்ணக்கூடும் என, சிலர் சிரிக்க மாட்டார்கள்* சிரிக்கத் தெரியாதவர்கள், அவர்களை அறியாமலே தன்னைச் சுற்றி வேலி அமைத்துக் கொள்கின்றனர்* நம் சிரிப்பால், மூளையில் எழும் துாண்டுதல், 2,000 சாக்லேட் பார் சாப்பிடுவதற்கு சமம் என்கிறது, ஒரு ஆய்வு!உங்களுக்கு தெரியுமா...* அடிக்கடி சிரிப்பவர்கள், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாய் வலம் வருவர்* எதிராளி சிரிக்கும்போது, தன்னுடைய பேச்சைத் துவக்கி, தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பர்* போனில் சிரித்தபடியே பேசிப் பாருங்கள், உரையாடல் நீண்டபடியே போகும்* உங்கள் கண்களை பிரகாசிக்க செய்யும், சிரிப்பு. ஆத்மாவுக்கு புத்துணர்வு தருவதுடன், மூளையையும் துாண்டி விட்டு செயல்பட வைக்கும்* ஒருவரின் சிரிப்பை, 300 அடி துாரத்தில் இருந்து உணர முடியும்* ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும், 53 முக்கிய தசைகள் முகத்தில் இயங்குகிறது* சிம்பன்சி குரங்குகளுக்கு, மனிதர்கள் போல் சிரிக்கவும், புன்னகை செய்யவும் தெரியும்.நீங்கள் சிரியுங்கள். குறைந்தது, 50 சதவீதத்தினராவது பதிலுக்கு சிரிப்பர். சிரிப்பில், 19 விதம் உண்டு. இவை சமூக சூழல் மற்றும் தனி சூழல் என, இரு வகைப்படும். சமூக சூழலில் சிரிக்கும்போது, சில சதைகள் இயங்குகின்றன. அதுவே தனியாக சிரிக்கும்போது, நம் முகத்தின் இருபுறமும் உள்ள சதைகள் அனைத்தும் அசைகின்றன.மொத்ததில், சிரிப்பது மூளைக்கு புத்துணர்வு தரும், ஆன்மாவுக்கு நல்லது. மன மகிழ்ச்சிக்கு, 'டானிக்!'புரிஞ்சுக்குங்க, செயல்படுத்துங்க!—ராஜி ராதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !