பனி சிற்ப திருவிழா!
சீனாவின் குளிர்ப்பிரதேசமான ஹார்பின் நகரில், டிசம்பர், ஜனவரியில், மைனஸ் டிகிரி குளிர் நிலவும். உடலை உறைய வைக்கும் இந்த குளிரில், பனி சிற்ப திருவிழா நடக்கும். ஆண்டு தோறும் நடக்கும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். இந்தாண்டுக்கான பனி சிற்ப திருவிழா, சமீபத்தில் கோலாகலமாக நடந்தது. பனிக்கட்டியில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பல வண்ணங்களில் ஜொலித்து, சொர்க்கத்தையே பூமியில் வடிவமைத்தது போல் காணப்பட்டன. இந்த திருவிழாவுக்கு வந்திருந்த காதலர்கள் பலர், அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். நீச்சல் மற்றும் பாட்டுப் போட்டி என, பலவிதமான போட்டிகளும் இங்கு நடத்தப்பட்டன.— ஜோல்னாபையன்.