உள்ளூர் செய்திகள்

ஸ்ரீராம நவமி

ஏப். 12 ராம நவமிராம நவமிக்கு காரணமான தேவதை!அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும், 'எங்களை எல்லாரும் கெட்டவர்களாகவே பார்க்கின்றனர்...' என்று, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களது வருத்தத்தைப் போக்க, அஷ்டமி திதியில், கிருஷ்ணராகவும், நவமி திதியில் ஸ்ரீராமராகவும் அவதரித்தார் விஷ்ணு பகவான். அந்த ராமர் அவதரித்த நாள் தான், ராம நவமி.***காயத்ரி ராமாயணம் தெரியுமா?வால்மீகி ராமாயணத்தில் முதல் பாடலின், முதல் எழுத்தில் ஆரம்பித்து, ஒவ்வொரு ஆயிரம் பாடலுக்கும் ஒரு எழுத்தாய் மொத்தம், 24 ஆயிரம் பாடல்களில் இருந்து, 24 எழுத்துக்களை சேர்த்தால் கிடைப்பதே காயத்ரி ராமாயணம்.ராமபிரான் உபதேசம் பெற்ற கோவில்!சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேதியரேத்தல் விலக்கை அடுத்துள்ளது பஞ்ச பூதேஸ்வரம், பஞ்சமுக பிருத்யங்கரா தேவி கோவில். இங்கு தான் ராமபிரான் உபதேசம் பெற்றார். ராவணனுடன் போரிட புறப்பட்டதும் இங்கிருந்துதான்; போரில் வெற்றி பெற, சக்தியை நோக்கி ராமபிரான் பூஜை செய்ததும் இங்குதான். பூமியிலிருந்து ராஜகோபுரம் வரை கருங்கல்லால் கட்டப்பட்டது இக்கோவில்.***ஸ்ரீராமர் வழிபட்ட தலம்!திருச்சி அருகே உள்ள லால்குடியிலிருந்து, நான்கு கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது கூகூர் குஹேஸ்வரர் கோவில். இது, அதர்வண வேத சக்திகள் நிறைந்த தலங்களுள் ஒன்று. ஸ்ரீராமர், இங்கு வழிபட்டதாக வரலாறு. இங்கு தான் ஸ்ரீராமரிடம் இருந்து பாத ரட்சைகளை தம்முடைய தினசரி பூஜைக்காக குகன் பெற்றார். நவநாத சித்தர்கள் ராமாயண புராணத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, இந்த ஆலயத்தில் வந்து தான் வணங்கி பெற்றனர் என்பது இந்த தலத்தின் தனிச் சிறப்பு.ராமாயண சிறப்புடைய கோவில்!தருமபுரி அருகே உள்ள கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், ராமாயண கால சிறப்பு பெற்றது. ஸ்ரீராமன் குறுமுனி அகத்தியர் வாயிலாக, 'பஞ்சதசாக்ஷரி' எனும் மகா மந்திரத்தை பெற்று, வசந்த நவராத்திரியை உலகில் ஆரம்பித்த புண்ணியமான திருத்தலம் இது. இக்கோவிலைச் சுற்றி ராமாயணக் காட்சிகள் முழுவதையும் புடைப்புச் சிற்பங்களாக அமைத்துள்ளனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !