உள்ளூர் செய்திகள்

இப்படியும் ஒரு நாடு!

ராணுவம் இல்லை, துாதரகம் இல்லை, விமான நிலையங்களும் இல்லை. குற்றவாளிகள் இல்லாததால் சிறைச்சாலைகளும் இல்லை. இப்படியும் ஒரு நாடு இருக்கிறது. 160 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை, 38 ஆயிரத்து 348. இவர்களில், 70 சதவீதம் பேர் வெளிநாட்டினர்.சொந்தமாக ரூபாய் நோட்டுகள் இல்லாத இந்த நாடு, ஸ்விட்சர்லாந்து கரன்சிகளை தான் பயன்படுத்துகிறது. ஐரோப்பிய நாடான லிச்சன்ஸ்டைன் தான் அது. ஸ்விட்சர்லாந்துக்கும், ஆஸ்திரியாவுக்கும் மத்தியில் இருக்கும் இந்த நாடு, ஆகஸ்டு, 15ம் தேதியை, தேசிய நாளாக கொண்டாடுகிறது. மன்னர் ஆட்சி நடைபெறும் இந்த நாட்டில், தேசிய நாளில், அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்து, விருந்து வழங்குவது வழக்கமாம். இப்படியும் ஒரு நாடா என, வியப்பாக இருக்கிறது அல்லவா? —ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !