உள்ளூர் செய்திகள்

இப்படியும் ஒரு சாதனை!

ரஷ்யாவைச் சேர்ந்தவர், பிரபல சிகை அலங்கார நிபுணர், டெனிஸ் யுசின். இவருக்கு, தன்னுடைய சின்ன கடைக்குள் அமர்ந்து, சிகை அலங்காரம் செய்வதை விட, உலகம் முழுவதும் சுற்றி, வித்தியாசமான சூழ்நிலையில், சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என வித்தியாசமான ஆசை தோன்றியது.இதனால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில், சிகை அலங்கார பெட்டியுடன், உலகை வலம் வருபவர், பாராசூட்டில் பறந்தபடியும், பனிப் பிரதேசங்களில் அமர்ந்தும், தண்ணீருக்குள் நீச்சலடித்த படியும், பலருக்கு சிகை அலங்காரம் செய்து, சாதித்து காட்டியுள்ளார். இவருக்கு, மனைவியும், ஆறு வயதில், ஒரு மகளும் உண்டு.தன், சாதனையை நிறைவேற்றுவதற்காக, குடும்பத்தை விட்டு பிரிந்து, மங்கோலியா, சீனா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் என, ஒவ்வொரு நாடாக, மோட்டார் சைக்கிளில் சுற்றி வருகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !