சம்மர் டிப்ஸ்!
* பச்சை வாழைப் பழ தோலை, மூடிய கண்களுக்கு மேல் வைத்து சிறிது நேரம் படுத்திருந்தால், கண் வலி, கண் எரிச்சல் குறையும்.* புளித்த தயிர், வெள்ளரி சாறு, எலுமிச்சை சாறு, 3: 2: 1 என்ற விகிதத்தில் கலந்து, உடலில் பூசி குளித்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.* அம்மை கண்டோருக்கு, நீர் மோர், இளநீர், பார்லி தண்ணீர், குளுகோஸ் ஆகியவற்றை கொடுக்கலாம். எனினும், மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது.* கருப்பு நிறம், உஷ்ணத்தை கிரகிக்கும் தன்மையுடையது. ஆகையால், கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, வெயிலுக்கு இதமான வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்தவும்.* இரவில் படுக்க செல்லும் முன், தினமும் வெது வெதுப்பான நீர் ஒரு டம்ளர் பருகினால், உடல் சூடு குறைவதுடன், மேனி வறட்சியும் ஏற்படாது.