உள்ளூர் செய்திகள்

தமிழா....தமிழா ! - கவிதைச் சோலை

*  நெஞ்சு கொதிக்குதடா... விந்தையை எண்ணிச் சிரிக்குதடா...*  தமிழே, தாயென முழங்கிடுவர்...தமிழ் அரசன் நானென முரசொலிப்பர்...தமிழ் என் மூச்சென முட்டிடுவர்...தமிழனை மட்டும் மறந்திருப்பர்!*  தமிழுக்கென் முழு வாழ்வென்பர்...தமிழ் வாழவும் உயிர் விடுவோமென்பர்...தமிழின ரத்தம் கொதிக்குதென்பர்...தலைநகரத்தில் இந்தியில் பேசிடுவர்!*  தமிழுக்காய் என் உழைப்பென்பர்...தமிழ்ப் போர் தொடுக்க அழைத்திடுவர்...தமிழ் உரைக்கா நா இனி எதற்கென்பர்...தம் பிள்ளையை கான்வென்ட்டில் சேர்த்திருப்பர்!*  தமிழ் மானம் காக்க மோதிடுவர்...தமிழினத்திற்காக வாதிடுவர்...தமிழ்ப் பேரரசன் இனி அவரென்பர்...இல்லத்தில் தெலுங்கு பேசிடுவர்!*  இத்தனை வசனங்கள்...எத்தனை ஆண்டுகள்...இன்னுமிங்கே பார்த்திருப்பீர்...தமிழ் மானம், வீரம், ஈரம்...என்போரைக் கண்டால், கேட்டால்...இப்போதேனும்... புரிந்திடுவீர்!— ச.பிரசன்னா,  சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !