மொட்டை மாடியில் சாலை வசதி!
தொழில் நுட்பம் மற்றும் கட்டுமானப் பணி வளர்ச்சியில் சீனாக்காரர்களின் வளர்ச்சி, மற்ற நாடுகளால் எட்ட முடியாத உயரத்துக்கு போய் விட்டது. அங்குள்ள ஜோகுங் என்ற நகரில், பிரமாண்டமான, ஐந்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.இந்த கட்டடத்தின் மொட்டை மாடியில், அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில், 'பார்க்கிங்' வசதி மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.குடியிருப்பு வாசிகளின் வசதிக்காகவும், அடுக்கு மாடி குடியிருப்பு விற்பனையை அதிகரிக்கவும் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.— ஜோல்னாபையன்.