உள்ளூர் செய்திகள்

குப்பை அள்ளும் தாய்க்கு மகள் செலுத்திய நன்றி!

சமீபத்தில், தாய்லாந்தில் அழகிப் போட்டி நடந்தது. இதில், 17 வயதான கனித்தா என்ற பெண், பட்டம் வென்றார். இவருக்கு தந்தை இல்லை; தாய் மட்டும் தான். தாயாரின் தொழிலோ குப்பை பொறுக்குவது!தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து, இவ்வளவு பிரபலமாவதற்கு காரணமாக இருந்த தன் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக, பட்டம் வென்ற கையுடன், கிரீடத்தை கூட கழற்றாமல், நேராக, தன் தாயைப் பார்க்கச் சென்றார் கனித்தா. அங்கு, வழக்கம்போல், குப்பை தொட்டியில் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த தன் தாயின் கால்களில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றார் கனித்தா.இப்புகைப்படம், இணையதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கனித்தாவின் மதிப்பையும், பல மடங்கு உயர்த்தி விட்டது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !