தாடிக்கார பெண்மணிக்கு ரசிகர்கள் அதிகம்!
கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த, முக்தபார் டோரெவா என்ற, 65 வயது பெண்ணுக்கு, நீண்ட தாடி வளர்ந்துள்ளது. இவரை முதல் முறையாக பார்க்கும் யாருக்குமே, ஆண் என்று தான் நினைக்க தோன்றும். 'என்னுடைய ௨௫வது வயதிலேயே தாடி வளர்க்கத் துவங்கி விட்டேன்; என் வீட்டுக்காரருக்கு, இந்த தாடி ரொம்ப பிடிக்கும். எங்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இந்த தாடி தான் முக்கிய காரணம். இப்போது எனக்கு, ஆறு பேர குழந்தைகள் உள்ளனர். இந்த தாடி காரணமாக, கஜகஸ்தானில் பிரபலமாகி விட்டேன். ஏராளமான ரசிகர்களும் உருவாகி விட்டனர்; வெளியில் செல்லும்போது, என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்...' என, தாடியை வருடியபடியே கூறுகிறார், முக்தபார்.— ஜோல்னாபையன்.