நிர்வாண மோனலிசா!
மோனலிசா ஓவியத்தை அனைவரும் பார்த்திருப்போம்... ஆனால், நிர்வாண நிலையில் இருக்கும் மோனலிசா ஓவியத்தை பார்த்திருக்கிறீர்களா...பாரிஸ் நகரத்தில் உள்ள, 'லோவ்ரீ' என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம், கரியால் வரையப் பட்டுள்ளது.இது, மோனலிசா ஓவியமாக இருக்கக் கூடும் என்று கருதும், பிரான்ஸ் நாட்டு ஓவிய வல்லுநர்கள்,'உயர் தரமுள்ள இந்த ஓவியம், டாவின்சியின் காலமான, 16ம் நுாற்றாண்டின் துவக்க காலத்தை சேர்ந்தது...' என்று உறுதிபடக் கூறுகின்றனர்.ஆனாலும், 'இந்த ஓவியத்தின் மேல் பகுதியில் உள்ள கிறுக்கல்கள் வலது கை பழக்கம் உடையவர் வரைந்ததைப் போல் உள்ளது; ஆனால், டாவின்சி இடது கை பழக்கமுடையவர்...' என்கிறார், மற்றொரு ஆய்வாளர். இது குறித்து ஆராய்ந்து முடிக்க சிறிது காலம் ஆகும் என்கின்றனர், ஓவிய நிபுணர்கள். — ஜோல்னாபையன்.