கியூபாவிற்கு சென்ற உலகில் உயர்ந்த மனிதன்!
சுல்தான் கோசன் என்பவர் தான், கின்னஸ் சாதனை புத்தகத்தின் படி, உலகிலேயே மிக உயரமான மனிதர். துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம், 25ம் தேதி கியூபா நாட்டிற்கு சென்றார்.ஹவானா நகரில் உள்ள நூலகம் ஒன்றிற்கு சென்ற இவரைப் பார்க்க கூட்டம் அலை மோதியது. 28 வயதான சுல்தான் கோசன், கியூபாவில் உள்ள கறுப்பர்களை விட மிகவும் உயரமாக காணப்பட்டார். இவருடன் சென்றவர்கள் அனைவரும் குள்ளமானவர்களாக காட்சியளித்தனர்.வழக்கமான பஸ், கார்களில் எல்லாம் இவரால் பயணம் செய்ய முடியாது. இவர் பயணம் செய்வதற்கென்றே தனி லாரி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.— ஜோல்னா பையன்.