உலகின் மிக உயரமான குடும்பம்!
வேதனைகளை சாதனைகளாக்கும் மன உறுதி, மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கும். அந்த பட்டியலில், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 52 வயதான சரத் குல்கர்னியும், 46 வயதான அவரது மனைவி சன்சோத்தையும், கண்ணை மூடிக்கொண்டு சேர்த்து விடலாம்.சரத் குல்கர்னியின் உயரம், 7 அடி, 1.5 அங்குலம். சன்சோத்தின் <உயரம், 6 அடி, 4 அங்குலம். இந்தியாவின் மிக உயரமான தம்பதி என்ற சாதனைக்காக, இவர்களின் பெயர், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள், ம்ருகாவுக்கு 22 வயது. இவரது உயரம் என்ன தெரியுமா? 6 அடி, 1 அங்குலம். இரண்டாவது மகள், சான்யாவுக்கு, 16 வயது. இவரது உயரம், 6 அடி, 4 அங்குலம். இந்த குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் ஒட்டு மொத்த உயரம், 26 அடி.நாட்டிலேயே, மிக உயரமான குடும்பம் என்ற சாதனையையும், இவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கியுள்ளனர். இதுதவிர, உலகிலேயே மிக உயரமான உறுப்பினர்களை உ<டைய குடும்பம் என்ற சாதனையை பெறுவதற்காக, கின்னஸ் சாதனைக்காக, இவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.ஆனாலும், கின்னஸ் புத்தகத்தில், 'மிக உயரமான குடும்பத்தினர்' என்ற பிரிவு, சேர்க்கப்படாததால், இவர்களின் உலகளாவிய சாதனைக்கு, தற்காலிக முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது.'மிக உயரமான குடும்பம்' என்ற பிரிவை சேர்ப்பது குறித்து, பரிசீலித்து வருவதாக, கின்னஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது, இந்த சாதனை குடும்பத்திற்கு, சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனாலும், இவர்களது சந்தோஷத்தின் மறுபக்கம், மிக வேதனையானது. சரத் குல்கர்னி, டீன்-ஏஜ் வயதிலேயே, கிடு கிடுவென வளர்ந்து விட்டார். இதனால், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், முகம் தெரியாதவர்கள் என, அனைவரின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாக நேர்ந்தது.இதன்பின், சன்சோத்தை திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து சன்சோத் கூறியதாவது:நம் நாட்டில், கணவரை விட, மனைவி உயரம் குறைவாக இருக்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. இதனால், என்னை விட, உயரமானவரைத் தான், திருமணம் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பல இடங்களிலும் விசாரித்து, கடைசியாக குல்கர்னியை தேடி பிடித்தோம். இப்போது, மகிழ்ச்சியான குடும்பமாக நாங்கள் இருந்தாலும், இந்த மகிழ்ச்சியை அடைவதற்காக, அதிக விலை கொடுத்துள்ளோம் என்கிறார் சன்சோத்.இந்த குடும்பத்தில் உள்ள அனைவருமே, சராசரியை விட, அதிக உயரமாக இருப்பதால், இவர்களுக்கான காலணிகள், ஐரோப்பாவிலிருந்து, ஆன்லைன் மூலமாக வாங்கப்படுகின்றன. இந்தியாவில், இவர்கள் காலுக்கு ஏற்ற காலணிகள் கிடைப்பது இல்லை. தங்கள் உயரத்துக்கு ஏற்றபடி, வீடு, வாசல், கதவு, குளியலறை, டைனிங் டேபிள், ஜன்னல் ஆகியவற்றையும், வடிவமைத்துள்ளனர்.***