உள்ளூர் செய்திகள்

இது புதுசா இருக்கே!

ஹாலிவுட்டில், இப்போதெல்லாம், புதிய படங்களை விளம்பரப்படுத்துவதற்கு, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், என்னென்னவோ செய்து வருகின்றனர். ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஹர்மனி கொரின்ஸ் என்பவர், 'ஸ்பிரிங் பிரேக்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, படத்தின் ஹீரோயின், வெனீசா ஹட்சன்ஸ் அணிந்து வந்த உடையை பார்த்ததும், அங்கு இருந்த அனைவருக்குமே, மயக்கம் வராத குறைதான்.எப்போது வேண்டுமானாலும், நழுவி விழக் கூடிய அளவுக்கு, அவர் அணிந்திருந்த உடை இருந்தது. வெனீசாவின் இந்த வித்தியாசமான உடையை பார்த்ததும், பலாப் பழத்தில் ஈ மொய்ப்பது போல், ஏராளமான ரசிகர்கள், வெனீசாவையே, சுற்றிச் சுற்றி வந்தனர். பத்திரிகை மற்றும் 'டிவி' சேனல்களின் புகைப்படக்காரர்களும், வெனீசாவை, 'பிளாஷ்' மழையில் நனைய வைத்தனர்.அமெரிக்காவில் உள்ள, சமூக ஆர்வலர்களோ,'படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, இதுபோன்ற ஆபாச உடைகளை அணிந்து வருவது, மிகவும் மோசமான விஷயம். இந்த விபரீதம், எங்கே போய் முடியப் போகிறதோ...' என, புலம்புகின்றனர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !