உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல!

ஆன்மிகத்தில் அஜீத்!

சமீபகாலமாக, ஆன்மிகத்தில் பயணித்து வரு கிறார் அஜீத். சாய்பாபாவின் தீவிர பக்தராகிவிட்ட அவர், புத்தரின் போதனைகள் அடங்கிய புத்தகத்தையும் அடிக்கடி படித்து வருகிறார். அதுபற்றி ஆன்மிகவாதிகளிடமும் நிறையவே விவாதித்து வருகிறார். — சினிமா பொன்னையா

அமலாபால் ஆதிக்கம்!

'வேட்டை' படத்தில் ஓரளவு கவர்ச்சி எல்லையைத் தாண்டிய அமலாபால், தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்கும் படத்தில், ஒரு பாடலில், மழையில் நனைந்தபடி நடித்துள்ளார். அதோடு, டூ - பீஸ் காஸ்டியூமிலும் கலக்கியிருப்பதால், இந்த படத்துக்கு பின்,ஆந்திராவில், அமலாவின் ஆதிக்கம் ஓங்கி விடும் என்கின்றனர். நடலப் புடலங்காய் காய்க்கிறதாம்; நாழிக்குப் பத்தெட்டு விற்கிறாளாம்!— எலீசா

மோனிகா கறார்!

'குறும்புக்கார பசங்க' படத்தில் நடித்து வரும் மோனிகாவின் கைவசம், பெரிய அளவில் படங்கள் இல்லை. இருப்பினும், யாராவது படங்களுக்கு, 'புக்' செ#ய சென்றால். '10 லட்சத்துக்கு ஒரு பைசா குறைந்தாலும் நடிக்க மாட்டேன்...' என்கிறார். அதோடு, கவர்ச்சி விஷயத்திலும் கறாராக பேசுகிறார். இதனால், பட்ஜெட் படக்கம்பெனி கள் மோனிகாவை நெருங்க அஞ்சுகின்றன. நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்!— எலீசா

தென் ஆப்பிரிக்காவில், 'சிங்கம் - 2'

'சிங்கம்' படத்தை, நெல்லை மாவட்டத்தில் தொடங்கி, சென்னையில் கொண்டு வந்து முடித்திருந்தார் டைரக்டர் ஹரி. ஆனால், இப்போது இயக்கும், 'சிங்கம் - 2' படம், தென் இந்தியாவில் ஆரம்பித்து, தென் ஆப்பிரிக்காவில் முடிகிற மாதிரியான கதையாம். மேலும், 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்' என்ற பஞ்ச் டயலாக்கை இப்படத்திலும் வைத்துள்ளார்.— சி. பொ.,

கிளாமருக்கு மாறும் நந்தனா!

'கிருஷ்ணவேணி பஞ்சாலை' படத்தில் நடித்த நந்தனாவுக்கு, அப்போதே சில கமர்ஷியல் படங்கள் தேடி வந்தன. ஆனால், 'கிளாமராக நடிப்பதில் விருப்பமில்லை' என்று, அந்த படங்களை தவிர்த்து விட்டார். இதனால், யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை. தடுமாறிப்போன நந்தனா, முதலில் தவிர்த்த கிளாமர் வேடங்களை, இப்போது ஆதரிப்ப@தாடும், சில கோலிவுட் டைரக்டர்களையும் சான்ஸ் கேட்டு துரத்தி வருகிறார். விதி அற்ற பசு, கதி கெட்ட புல்லைத் தின்னும்!— எலீசா

வேகமாக வளரும், 'கடல்!'

வழக்கமான மணிரத்னம் படங்களை @பாலில்லாமல், அவரது, 'கடல்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் வேகவேகமாக பாடல்களை கொடுத்து விட்டதால், வசன காட்சிகளை முடித்து விட்ட மணிரத்னம், இப்போது பாடல் காட்சிகளை அந்தமான், கேரளா பகுதிகளில் படமாக்கி வருகிறார். ஆக, வெகு விரைவிலேயே, கடல் படத்துக்கு பூசணிக்காய் உடைத்து விடுவார் என்று தெரிகிறது.— சி.பொ.,

பத்மப்ரியா மீது புகார்!

'நம்பர் 66 மதுரை பஸ்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ள பத்மப்ரியா, முதலில் ஒரு சம்பளம் பேசி, படத்தில் நடித்து முடித்த பின், கூடுதலாக சம்பளம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தயாரிப்பாளர், பத்மப்ரியா மீது, கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். தற்போது, விசாரணை நடந்து வருகிறது.— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !