உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல!

ரஜினிக்கு தயாரான கதையில் நடிக்கும், சிம்பு!ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்க்கு தயார் செய்த கதையில், அவர் நடிக்க மறுத்ததால், தற்போது, அதே கதையில், சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.அதேபோல், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்கு ஒரு கதை சொன்னார். அந்த கதையில், அவர் நடிக்க மறுத்ததால், இப்போது, அதை சிம்புவிடம் சொல்லி, ஓ.கே., செய்து விட்டார்.குறிப்பாக, ரஜினிக்கு உருவான கதை என்பதால், அதில் சிறு மாற்றம் கூட செய்யாமல், அப்படியே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார், சிம்பு.— சினிமா பொன்னையாபடுக்கையறை காட்சிக்கு, 'நோ' சொல்லும், வாணி போஜன்!சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த, வாணி போஜன், சில படங்களில், படுக்கையறை காட்சிகளில் நடித்தார். அதைப் பார்த்து தற்போது, அது போன்ற கதாபாத்திரங்களாகவே அவரை தேடி படையெடுக்கிறது.'இப்படியே விட்டால், என்னை முழுநேர ஆபாச நடிகையாக்கி விடுவர் போலிருக்கே...' என, அதிர்ச்சியடைந்த, வாணிபோஜன்,'கூடுதலாக பணம் கொடுத்தாலும், அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்...' என்று, ஓட்டம் பிடிக்கிறார்.— எலீசாதமன்னா அனுப்பும், 'சர்ப்ரைஸ் கிப்ட்!'தமிழ் சினிமா, தன்னை ஓரங்கட்டுவதாக குற்றம் சாட்டி, ஹிந்தி படங்களில் நடித்து வரும், தமன்னா, கோலிவுட்டின் அபிமானிகளை கத்தரித்து விடாமல், தொடர்ந்து நட்பு வளர்த்து வருகிறார்.அதன் காரணமாகவே, நெருக்கமான, 'ஹீரோ' மற்றும் -இயக்குனர்களின் பிறந்தநாள் என்றால், அவர்களுக்கு, முதல் நபராக, நள்ளிரவில் போனில் வாழ்த்து சொல்லி, 'சர்ப்ரைஸ் கிப்ட்'டையும் அனுப்பி வைத்து, இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார், தமன்னா.— எலீசாதயாராகி வரும், கமலின் இந்தியன் - 3!இந்தியன் படத்தை அடுத்து, கமலும், ஷங்கரும் இணைந்துள்ள, இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியன் - 2 திரைக்கு வருவதற்கு முன்பே, இந்தியன் - 3 படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார், ஷங்கர்.இருப்பினும், அதற்குரிய தகவலை வெளியிடாமல், அவுட்டோர்களில் இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்தியன் படத்தை, மூன்றாவது பாகத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் பல பாகங்கள் எடுப்பதற்கும், கமலும், ஷங்கரும் திட்டமிட்டுள்ளனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!* மனைவியை விவாகரத்து செய்த, சுள்ளான் நடிகர், தற்போது தான் நடித்திருக்கும், எட்டெழுத்து படத்தை, பொங்கலுக்கு முன்பே வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், பொங்கலுக்கு, முன்னாள் மனைவி இயக்கியுள்ள படம், திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதே நாளில், தன் படத்தையும் களத்தில் இறக்கி, அந்த படத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, வெளியீடு தேதியையும், பொங்கலுக்கு மாற்றி வைத்து விட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த சுள்ளானின் முன்னாள் மனைவி, 'போட்டி கோதாவில் குதிக்கலாமா, இல்லை பின்வாங்கி விடலாமா?' என்று, தற்போது யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்.* சினிமாவை தொடர்ந்து, அரசியலையும் ஒரு கை பார்க்க வேண்டும் என, தயாராகி விட்டார், தளபதி நடிகர். தான் சிங்கிளாக களம் இறங்கினால், புரட்சித்தலைவர் பாணியில் வெற்றிக்கொடி நாட்டி விடலாம் என்று, திட்டம் போடும் அவருக்கு, பலரும் அதிர்ச்சி கொடுத்து விட்டனர்.'அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இனிமேல் சரியான கூட்டணி அமைத்தால் மட்டுமே அரசியலில் கோலோச்ச முடியும்...' என, தளபதிக்கு, 'அட்வைஸ்' கொடுத்துள்ளனர். எனவே, தற்போது சில கட்சிகளை, தன்னுடன் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய கூட்டணியை உருவாக்க, திரைமறைவில் தீவிர திட்டம் தீட்டி வருகிறார், தளபதி. சினி துளிகள்!* நடிகர் ஜெயராமின் மகனான, நடிகர் காளிதாசுக்கும், மாடல் அழகி தாரணி காளிங்கராயருக்கும், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.* தன் மூத்த மகன், யாத்ராவை, ஜூனியர் ரஜினியாக, சினிமா களத்தில் இறக்கி விட திட்டமிட்டுள்ளார், ரஜினியின் மூத்த மகளான, இயக்குனர், ஐஸ்வர்யா ரஜினி.* விஜயுடன், வசீகரா படத்தில் நடித்த, சினேகா, தற்போது, அவர் நடிக்கும், 68வது படத்தில், அப்பா விஜய்க்கு, ஜோடியாக நடிக்கிறார்.* குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை, ரித்திகா சிங், தான் நடிக்கும் ஒரு புதிய படத்திற்காக, 'சிக்ஸ் பேக்' உடல் கட்டுக்கு மாறி வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !