உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

அந்த, 'மாதிரி' புத்தகம் வேண்டாமே!பேச்சுலர் நண்பன் ஒருவனின் அறைக்குச் சென்றிருந்த போது, அங்கு சாமுத்திரிகா லட்சணம் மற்றும் அங்கத் தோற்றங்களை கொண்டு, பெண்களின் தன்மையை, அறிவதை விளக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. 'இந்த புத்தகத்துல போட்டிருக்கிற இலக்கணத்தை வச்சு, 'பிகர்'களை கணிச்சு, எப்படி மடக்கணுமோ, அப்படி மடக்கிடுவேன்...' என்று, காலரை தூக்கி விட்டுக் கொண்டான் நண்பன். நானும், ஆர்வமாக அந்தப் புத்தகத்தைப் புரட்டினேன்.'...தோற்றமுடைய பெண்ணுக்கு, காதல் உணர்வு மிக அதிகமாக இருக்கும். ....தோற்றமுடைய பெண், எந்த ஆணுக்கும் எளிதில் வசப்படுவாள்...' என்பன போன்ற பல, 'டிப்ஸ்' அதில் இருந்தன. சுலபமாக கவிழ்ந்து விடும் பிகர்களை கண்டுபிடிக்கும் வழியை அறிந்து, சந்தோஷத்துடன் நண்பனின் அறையிலிருந்து திரும்பினேன்.ஆனால், அன்று வீட்டுக்கு வந்தவுடன் எனக்கு, ஆரம்பித்த மனக்கலக்கம் இன்று வரை தீரவில்லை. வீட்டில் உள்ள தங்கையை, உறவுப் பெண்களை, பக்கத்து வீட்டுப் தங்கையை, எதிர்த்த வீட்டு ஆன்ட்டியை என, யாரைப் பார்த்தாலும், அவர் களின் தோற்றத்தில் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு அடையாளம், பொருந்தி வருவது போல் தோன்றுகிறது.இந்த அடையாளம் இருந்தால், காதல் உணர்வு அதிகம் இருக்குமாமே... இப்படி இருந்தால், எந்த ஆணிடமும் வீழ்ந்து விடுவாளாமே... என்று நான் படித்தது நினைவுக்கு வந்து, என் மனதை பாடாய்படுத்துகிறது. புத்தகத்தில் படித்ததை, மறந்து விட வேண்டும் என நினைத்தாலும், முடியவில்லை. என்னை அறியாமலே மனம் அலைபாய்கிறது. ப்ளீஸ், இளைஞர்களே.... இது போன்ற புத்தகங்களை படிக்காதீர். ஜாக்கிரதை!— தி.கணேஷ், மதுரை.இளமையைக் காப்பாற்ற... இப்படியா?என் தோழிக்கு, தன் அழகைப் பற்றியும், உடல்வாகு பற்றியும் பெருமை அதிகம். முப்பது வயதிலும் ரொம்ப இளமையாக இருப்பாள். திடீரென்று,'ஜிம்'மில் சேர்ந்து, தினமும், போய் வர துவங்கினாள். காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை வகுப்பு. அவளுடைய, ஐந்து வயதுக் குழந்தை எட்டு மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும். வெறும், அரை மணி நேரத்தில் வெந்தும், வேகாததுமாய் கொடுத்து அனுப்பி விடுவாள். கணவரின் நிலைமையும் அதுவே.ஒரே மாதத்தில், என் தோழியின் உடல் இளைத்ததோ இல்லையோ, அவள் மகளும், கணவரும் உடல் இளைத்து, துரும்பாகி, நோயாளிகளைப் போல் ஆகி விட்டனர். அவளுக்கு புத்திமதி சொன்னால், 'என் இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா...' என்கிறாள். இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக, குடும்பத்தை நட்டாற்றில் விட வேண்டுமா? — ஸ்ரீவித்யா, திருப்பூர்.தீ தடுப்பு முன் எச்சரிக்கை!அண்மையில், திருமண விழாவிற்கு சென்று இருந்தேன். திருமண மண்டபத்தில் இருந்த, 'தீ' தடுப்பு வாளிகளை கவனித்தேன். ஸ்டாண்ட் ஒன்றில், தீ என எழுதப்பட்ட வாளிகள் வரிசையாக தொங்கின. அத்தனையும் காலி வாளிகள். அதில் தண்ணீரோ, மணலோ இருப்பு வைக்கப்படவில்லை. திருமண மண்டப அரங்குக்குள், சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த தீ தடுப்பு கருவிகளையும் பார்த்தேன். அவையும், காலியாகத் தான் இருக்கின்றன. பல ஆயிரம் பேர் கூடும் திருமண மண்டபங்களில், தீ தடுப்பு கருவிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வர வேண்டாமா?— கு.அருணாசலம், தென்காசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !