டிப்ஸ்(ஸா)
நண்பன் நாராயணனை, அவனது பிரம்மச்சரிய வாழ்க்கையிலிருந்தே தெரியும். அவனுக்குப் பெண் பார்க்க சென்ற கும்பலுடன் நானும் போயிருந்தேன். பெண், அவனை பிடித்திருப்பதாக தெரிவித்தாள். அவனோடு அவன் அறைக்கு சென்றேன். எப்போதுமே அந்த அறை போட்டது போட்டபடி கந்தர கோலமாக இருக்கும். 'இதையெல்லாம் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?' என்றேன். 'எல்லாம் அவ வந்து செய்து கொள்ளட்டும்' என்றார் புது மாப்பிள்ளை. இப்பத்தான் பெண்ணே பார்த்திருக்கு, அதற்குள் இந்த அதிகாரம்.— பாக்கியம் ராமசாமி.