உள்ளூர் செய்திகள்

டைட்டானிக் கப்பல் வயலின் ஏலம்!

'மிதக்கும் சொர்க்கம்' என, வர்ணிக்கப்பட்ட, டைட்டானிக் கப்பல், 1912ல், வட அட்லாண்டிக் பெருங்கடலில், பனிப் பாறையில் மோதி, மூழ்கியது. இதில், 1,500க்கும் அதிகமானோர், கடலில் மூழ்கி இறந்தனர். முன்னதாக, பயணிகளின் உயிர் பயத்தை குறைப்பதற்காக, கப்பலில் இருந்த இசைக் கலைஞர்கள் சிலர், தங்களின் இசைக் கருவிகளை இசைத்தனர். இவர்களில், ஹார்ட்லி என்ற, வயலின் இசைக் கலைஞரும் ஒருவர். இறுதியில், இவரும் இறந்து விட்டார். கடலில் மூழ்கியபோது, தான் உயிருக்கு உயிராக நேசித்த, வயலினை, தன் உடலுடன், இறுக்கி கட்டிக் கொண்டார். இவரது உடல், கரை ஒதுங்கிய போது, வயலினும் மீட்கப்பட்டது. அந்த வயலின், அவரது காதலியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த காதலி, தான் இறப்பதற்கு முன், அந்த வயலினை, தன் நண்பரிடம் கொடுத்து விட்டார். இந்த வயலின், பல கைகளை தாண்டி, தற்போது ஏலத்துக்கு வரவுள்ளது.அதற்கு முன், இந்த வயலின், டைட்டானிக் கப்பலில் இருந்தது தான், என்பதை, பல கட்ட சோதனையில் உறுதி செய்துள்ளனர். இந்த வயலின், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !