வெப்பத்திலிருந்து தப்பிக்க...
* இரவு, ஏழு மணிக்கு, மொட்டைமாடியில், தண்ணீர் தெளித்து வைத்தால், இரவில், மாடியில் படுக்கும் போது, காற்றோட்டமாகவும், சில்லென்றும் இருக்கும்.* திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் சோபா கவர்களை, லைட் கலர் பருத்தி துணிகளில் தைத்தால், வெயிலுக்கு இதமாக இருக்கும். திரைச்சீலைகளை, மெல்லிய துணியில் தைக்கும் போது, நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.* கிச்சன் மேடை, பால்கனி என, வீட்டின் ஒவ்வொரு ஏரியாவையும், தினமும், இருமுறை துடைத்தால், வெயிலின் கடுமை தெரியாது.* வீட்டின் அருகில், பால்கனியில் என, வீட்டை சுற்றி மரம், செடிகள் வளர்க்கலாம். தண்ணீர் பிரச்னை இருந்தால், தண்ணீர் அதிகம் தேவைப்படாத செடிகளை வளர்க்கலாம்.* செடிகளுக்கு, எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், வெயில் காலத்தில், அவை எளிதில் வாடி விடும். அவ்வாறு வாடாமல் இருக்க, துணியில், தண்ணீரை நனைத்து, செடிகளின் மீது போட்டால், அவை வாடாது.