வீட்டு தோட்டத்தை பராமரிக்க...
அரிசி, பருப்பு களைந்த நீரை வீணாக்காமல், செடிகளுக்கு ஊற்றினால், செழித்து வளரும்* டீ போட்ட பின் மிஞ்சும் சக்கையை, பூச்சட்டியில் உரமாக துாவலாம்* முட்டை வேக வைத்த நீரை, ஆறிய பின் செடிகளுக்கு ஊற்றினால், அவை தளதளவென்று வளரும்* குரோட்டன்ஸ் செடிகளின் நுனி குருத்துகளை அவ்வப்போது கிள்ளி விடலாம்; இதனால், செடி கொப்பும், கிளையுமாக, அடர்த்தியாக வளரும்.