உள்ளூர் செய்திகள்

நாய்களுக்கும் கழிப்பறை!

நம் நாட்டில், மனிதர்கள் பயன்பாட்டுக்கே போதிய கழிப்பறைகள் இல்லை. ஆனால், ஸ்பெயின் நாட்டில், நாய்களுக்கென பொது கழிப்பறைகளை கட்டி அசத்தியுள்ளனர். தாங்கள் வளார்க்கும் நாய்களை வெளியே அழைத்து செல்லும் போது, நாய்கள் கண்ட இடத்தில ஒன், டூ பாத்ரூம் சென்றால் தண்டனை கடுமையாக இருக்கும், எனவே, முக்கிய இடங்களில், நாய்களுக்கென கழிப்பறையை கட்டியுள்ளனர். ஆனால், இந்த கழிப்பறைகளை நாய்கள் பயன்படுத்துவதற்கு அவைகளின் எஜமானர்களின் உதவி தேவை. நாய்கள் கழிப்பறையை பயன்படுத்தி முடித்ததும், அதில் உள்ள பட்டனை அழுத்தினால், தண்ணீர் பீய்ச்சி அடித்து அந்த இடத்தை சுத்தப்படுத்தும்.—ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !