உடையாத கண்ணாடி!
அதிக விலை கொடுத்து வாங்கும், 'ஸ்மார்ட்' போன்கள், கீழே விழுந்தால், அதன், 'டிஸ்பிளே கிளாஸ்' உடைந்து விடுகிறது. இதை தவிர்க்க, 'கோர்னிங்' என்ற நிறுவனம், உடையாத, 'கிளாஸ்' ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து அந்நிறுவனம், 'கொரில்லா கிளாஸ்கள் என்று சொல்லப்படும் இந்த, 'டிஸ்பிளே கிளாஸ்' பொருத்தப்பட்ட மொபைல் போன், 51.6 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் கூட உடையாது...' என்று, உறுதி அளித்துள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் மொபைல் போன்களில் தான், அதிகமாக, 'கொரில்லா கிளாஸ்' பொருத்தப்படுகிறது.— ஜோல்னாபையன்.